நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்ததில் பா.ஜ.கவின் பங்கு இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. பொதுமக்கள் அனுதாபம் காரணமாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-வுக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
அஜித் பவாரின் கட்சியுடன் கூட்டணி வைத்தது குறித்து பா.ஜ.க-வை ஆர்.எஸ்.எஸ்.கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸின் பத்திரிகையில் இது தொடர்பான அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி ரத்தன் சார்தா எழுதியுள்ள கட்டுரையில், “‘பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணியில் ஏற்கனவே பெரும்பான்மை பலம் இருக்கும் போது அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்தது தேவையற்ற அரசியல்.
சரத் பவார் இன்னும் 2-3 ஆண்டுகளில் காணாமல் போயிருப்பார். அப்படி இருக்கும்போது ஏன் இதுபோன்ற ஒரு தவறான முடிவு எடுக்கப்பட்டது? பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்த்து பா.ஜ.க போராடி வருகிறது. அஜித் பவாருடன் கூட்டணி வைத்து பா.ஜ.க தனது மதிப்பை குறைத்துக்கொண்டது. அதோடு இந்த செயல் பா.ஜ.க தொண்டர்களை காயப்படுத்தி இருக்கிறது. தேவையற்ற அரசியலுக்கு மகாராஷ்டிரா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டு இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தும் சமீபத்தில் மக்களவை தேர்தலில் நாகரீகம் இல்லாதது குறித்து பேசியிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். கருத்து குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் உமேஷ் பாட்டீல் அளித்த பேட்டியில், ”ரத்தன் சார்தாவின் கருத்து வெளியான பத்திரிகை ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சொந்தமானது கிடையாது. அக்கருத்து ஆர்.எஸ்.எஸ்.கொள்கையை பிரதிபலிக்கவில்லை. கட்டுரையில் இடம் பெற்று இருக்கும் கருத்தை பா.ஜ.க தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. தோல்விக்கான காரணத்தை தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்”என்றார்.
அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சிக்கு 100 தொகுதிகள் கொடுக்கவேண்டும் என்று அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
GIPHY App Key not set. Please check settings