அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறைந்தது வணிக பயன்பாடுக்கான எரிவாயு சிலிண்டர் விலை
தொடர்ந்து நான்காவது மாதமாக வணிக பயன்பாடுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை, ஆயிரத்து 840 ரூபாயில் இருந்து ஆயிரத்து 809 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி : கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நான்கு விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
- First Published :
GIPHY App Key not set. Please check settings