இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர், “அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி முறிவு, அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவையும், பா.ஜ.க-வுக்கு வாக்கு சதவிகிதத்தில் முன்னேற்றத்தையும் கொடுத்திருக்கிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி இருந்திருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம் என எடப்பாடிக்கு நெருக்கமான புள்ளிகளே பேச ஆரம்பித்துவிட்டனர். `தொண்டர்களை தோல்விக்கு பழக்குவது பாவம்’ என ஓரே போடாக போட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். எனவே சிதைந்து போயிருக்கும் அ.தி.மு.க-வின் பிம்பத்தை மீட்டுருவாக்கம் செய்திட எடப்பாடி எதேனும் மாயாஜாலங்களை செய்தாக வேண்டும். அது பா.ஜ.க, பா.ம.க-வை உள்ளடக்கிய கூட்டணியால்தான் முடியும் என்பதே நாடாளுமன்றத் தேர்தல் அ.தி.மு.க-வுக்கு உணர்த்தும் செய்தி” என்றனர்.
நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வினர், “பா.ஜ.க-வை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் அட்ரஸ் இல்லாமல் போவார்கள் என்றே கருதினோம். ஆனால் வலுவான கூட்டணி அமைத்து கணிசமான வாக்குகளை பெற்றுவிட்டார்கள். பா.ஜ.க கூட்டணி அ.தி.மு.க-வுக்கு பெரும் சேதாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அ.தி.மு.க தலைவர்களை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை மாநிலத் தலைவராக வைத்துக் கொண்டே மீண்டும் கூட்டணி சேருவதை அ.தி.மு.க தொண்டர்கள் தொடங்கி எடப்பாடியே ஏற்க மாட்டார். எனவே பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி மீண்டும் அமைகிறதா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
GIPHY App Key not set. Please check settings