ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
சீனாவின் ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இருந்தது. இந்நிலையில் இந்திய அணி நேற்று தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் சுக்ஜீத் சிங் இரு கோல்களையும் (2-வது மற்றும் 60-வது நிமிடங்கள்), அபிஷேக் (3-வது நிமிடம்), சஞ்ஜய் (17-வது நிமிடம்), உத்தம் சிங் (54-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். ஜப்பான் அணி சார்பில் 41-வது நிமிடத்தில் மட்சுமோட்டோ கசுமாசா ஒரு கோல் அடித்தார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (11-ம் தேதி) மலேசியாவுடன் மோதுகிறது.
6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்தத் தொடரில், ரவுண்ட் ராபின் லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் வரும் 16-ம் தேதியும், இறுதிப் போட்டி 17-ம் தேதியும் நடைபெறுகின்றன.
GIPHY App Key not set. Please check settings