in

ஆம்ஸ்ட்ராங் கொலை: `உண்மையான குற்றவாளிகளைப் பிடியுங்கள்!’ – வலியுறுத்தும் கட்சி தலைவர்கள் | political leaders urging tn govt to intense the Armstrong murder case probe


யார் அந்த உண்மை குற்றவாளிகள்?

கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன் தொடங்கி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரை கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை. உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இவர்கள் சந்தேகிக்கும் உண்மை குற்றவாளிகள் யார் என்பது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ” கொலைக் குற்றம் நடந்த சில மணிநேரத்திலேயே குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறோம். அதோடு அவர்கள் பயன்படுத்திய ஆயுதத்தையும் கைப்பற்றியிருக்கிறோம். கொலை சம்பவம் நடக்கும்போது அந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் தொடங்கி நேரில் பார்த்த சாட்சியங்கள் வரை இருக்கின்றன. எந்த குற்றவாளிகளையும் மறைக்கும் எண்ணம் காவல்துறைக்கு கிடையாது. வழக்கு விசாரணை குறித்துத் தொடர்ந்து தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதனவர்கள்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதனவர்கள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதனவர்கள்

இந்த கொலையில் முதலில் கைது செய்யப்பட்ட 8 பேர், அடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் ஆகிய 11 பேரைத் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோட்டமிட்டது யார், தகவல் சொன்னது யார் என்பது தொடங்கி பல்வேறு விவரங்களைச் சேகரித்திருக்கிறோம். பலர் சேர்ந்து கும்பலாகக் கொலை செய்யும்போது, ஒவ்வொருவர் ஒவ்வொரு உடல் பகுதியை வெட்டுவது. ஓடாமல் இருக்கக் கால் கணுக்காலை வெட்டுவது என இவையனைத்தும் தென் மாவட்டங்களில் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒருசில பகுதியைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் கொலை செய்யும் பேட்டன். இதில் கூலிப்படைக்கு எதுவும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. மற்றபடி, கைதானவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும்போதுதான் இன்னும் யாருக்கெல்லாம் இந்த கொலைக் குற்றத்தில் தொடர்பு இருக்கிறது என்பதெல்லாம் தெரியவரும்” என்றார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

PM Modi in Russia: அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி! | India PM Modi Arrives in Russia as Government tour

பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூல்! | prabhas starrer kalki 2898 ad movie box office collection day 11