நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பேசுகையில், சிவன் போன்ற இந்து கடவுள்களின் புகைப்படங்களை காட்டி இந்துக்கள் வன்முறையாளர்கள் என்பதுபோல் பேசினார். உடனே இந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி பேசிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமித் ஷாவும் குற்றம்சாட்டினர். அதோடு ராகுல் காந்தியின் உரையின் குறிப்பிட்ட பகுதியை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் பிர்லா நீக்கினார்.
ராகுல் காந்தியின் கருத்து குறித்து ஜோதிர் மடத்தின் 46-வது சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா அளித்துள்ள பேட்டியில், ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “‘ராகுல் காந்தியின் உரையை முழுமையாக கேட்டோம். அதில் இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்பதை அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings