ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டும் இந்த கணக்கு திமுகவிற்கு ஏன் பொய்க்கணக்கு ஆகிவிடுகிறது? தேவைக்கேற்ப கூட்டணிக் கட்சிகளை பயன்படுத்திக்கொள்வது, பின்னர் தூக்கிப் போட்டுவிடுவது என்பது பண்ணையார் மனநிலை இல்லையா? இனி இங்கே அதிகாரப் பகிர்வு இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாது.
காரணம், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கம் முன்னெப்போதும் இல்லாதவகையில் இன்று அனைத்து கட்சித் தொண்டர்களின் குரலாகவும், மக்களின் குரலாகவும் மாறி இருக்கிறது. அந்தக் குரலை பிரதிபலிக்கிற சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்.

ஒடுக்கப்பட்ட, பின் தங்கிய சமூகங்களின் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் காலம் கனிந்துள்ளது. ‘அதிகார பகிர்வு’ என்பதையே அனைத்து கட்சிகளும் தங்களின் உரிமையாக முழங்கும் காலமும் கனிந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கிகளை வைத்து ஆட்சிக்கு வந்து, அதிகாரத்திற்கு தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்கிற மாயையை இன்றைய ஆளும்கட்சி ஏற்படுத்தியுள்ளது.



GIPHY App Key not set. Please check settings