திருப்பூர் பனியன் பஜாரில் தீ விபத்து- 50 கடைகள் எரிந்து நாசம்
திருப்பூரில் புகழ்பெற்ற காதர்பேட்டை பனியன் பஜாரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில், 50 கடைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. 3 தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாட்னா கூட்டம் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது – மு.க.ஸ்டாலின்
பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நம்பிக்கை அளிக்கவகையில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உமா கார்த்திகேயன் மீண்டும் மத்திய சிறையில் அடைப்பு…
கோவையில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க ஆதரவாளர் உமா கார்த்திகேயன் விசாரணைக்கு பின்பு மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திட்ட கார்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ்..
ஜூன் 26 – சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பாக போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மணல் சிற்பம் கண்காட்சி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தனர்.
தென்காசி இளைஞர் மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த தங்கசாமி என்ற இளைஞர் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவரது மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெண் பேருந்து ஓட்டுநருக்கு கனிமொழி உறுதி…
கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக ஷர்மிளாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எம்.பி கனிமொழி உறுதியளித்துள்ளார்.
எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. அதன்பின்னர், எதிர்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் நிதிஷ் குமார், மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துவருகின்றனர்.
பீகாரிலிருந்து தமிழ்நாடு புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்…
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு புறப்பட்டார்.
கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் பணி விரைவில் தொடக்கம்…
கருணாநிதி பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகள் ஐஐடி நிபுணர்களின் உதவியோடு விரைவில் தொடங்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
1,750 பாயிண்ட்களில் 5,000 கேமராக்கள்… கண்காணிப்பு வளையத்தில் சென்னை…
Integrated Command & Control மையத்தில், “சென்னை பாதுகாப்பான நகரம்” (Chennai Safe City Project) என்ற திட்டத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். 1,750 பாயிண்டுகளில் 5,000 புதிய கேமராக்கள் வைக்ப்பட்டு, காவல் ஆணையர்கத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டறை மற்றும் உத்தரவு மையத்திலிருந்து கண்காணித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அலெர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சாகித்திய விருதுகள் அறிவிப்பு…
இலக்கியத்துக்கு வழங்கப்படும் சாகித்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஷர்மிளாவிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர்தான் பணி செய்ய விருப்பமில்லை” – ஷர்மிளா விவகாரத்தில் நடத்துநர் அன்னதாய் பேட்டி
பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா விவகாரம் தொடர்பாக உடன் பணியாற்றிய நடத்துநர் அன்னதாய் பேசுகையில்”நான் என் கடமையை செய்தேன். டிக்கெட் கனிமொழி இடம் கேட்டேன். கனிமொழி சிரித்துக்கொண்டு டிக்கெட் வாங்கினார். நான் ஏதும் தவறாக சொல்லவில்லை. கனிமொழியிடம் முதல்வர் குறித்து விசாரித்தேன். எனக்கும் சர்மிளாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஷர்மிளாவிடம் மன்னிப்பும் கேட்டேன். ஆனால் அவர்தான் பணி செய்ய விருப்பமில்லை” என்றார்.
ஷர்மிளாவை பணிநீக்கம் செய்யவில்லை – பஸ் உரிமையாளர் துரைக்கண்ணு பேட்டி
”பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை நான் பணிநீக்கம் செய்யவில்லை. பணியில் விட்டு நான் விலகவும் சொல்லவில்லை” என தனியார் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு பேட்டியளித்துள்ளார்.
கோவையில் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்
கோவையில் எம்.பி. கனிமொழி தனியார் பேருந்தில் பெண் ஓட்டுனரை ஊக்கப்படுத்த பயணித்தார். இந்நிலையில் பேருந்து உரிமையாளருக்கும் பெண் ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பெண் ஓட்டுனர் சர்மிளா பணியில் நீக்கப்பட்டுள்ளார்.
பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் https://t.co/tkZfDuMvOs
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 23, 2023
போட்டோ செஷன் – எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை விமர்ச்சித்த அமித் ஷா!
இரண்டு நாள் பயணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய காஷ்மீர் கட்டமைக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். அப்போது, பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை விமர்சித்து பேசிய அமித் ஷா, அது புகைப்படத்துக்காக கூடிய கூட்டம் என்று சாடினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் பாஜக வெற்றிபெறும் என்றும், பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பொறுப்பேற்பார் எனவும் தெரிவித்தார்.
பாஜாக பிரிவினைவாத அரசியலை செய்கிறது; காங்கிரஸ் ஒருங்கிணைக்கிறது ; ராகுல் பேச்சு
“பாஜக நாடு முழுவதும் மக்களிடையே, வெறுப்பை தூண்டி பிரிவினைவாத அரசியலை செய்கிறது; ஆனால் காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைக்க உழைத்துக் கொண்டிருக்கிறது” என எதிர்க்கட்சிகளின் பாட்னா பொதுக்கூட்டத்தில் காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
வரிச்சூர் செல்வத்தை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்…
விருதுநகரில் தன்னுடைய கூட்டாளியான செந்தில்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள வரிச்சூர் செல்வத்தை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் கருண் காரட் தலைமையிலான தனிப்படை போலீசார் விருதுநகர் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
பாட்னா சென்றடைந்த ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி எம்.பி ஆகியோர் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு சென்றடைந்தனர்.
#WATCH | Congress president Mallikarjun Kharge and party leader Rahul Gandhi arrive in Bihar’s Patna for the Opposition leaders’ meeting pic.twitter.com/O51rWBsKaw
— ANI (@ANI) June 23, 2023
டெல்லி அவசர சட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன் முடிவு – மல்லிகார்ஜுன் கார்கே
வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் டெல்லி அவசர சட்ட முன்வடிவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்கிறது. இதனை எதிர்க்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்தார். மேலும் அவசர சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தால் தான் எதிர்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என காங்கிரஸிடம் அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனை விதித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், டெல்லி அவசர சட்டத்தை எதிர்ப்பது குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு முடிவெடுக்கப்படும் என்றும், பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும் என தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு
திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி வீட்டில் எட்டு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் : பாட்னா புறப்பட்ட ராகுல் காந்தி
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்கா பங்கேற்கும் : மோடி நம்பிக்கை
பிறகு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவின் பொருளாதாரத்தையும், உள்ளடக்கிடக்கிய சமூகத்தையும் மேம்படுத்த பாடுபடுவதாக தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா அவர்களது சிறப்பான முயற்சியை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
#WATCH | Amidst the love for Baseball, Cricket is also getting popular in the US. The American team is trying their best to qualify for the Cricket World Cup to be held in India later this year. I wish them good luck and success: PM Modi during the official State Dinner at The… pic.twitter.com/996i2fkdJx
— ANI (@ANI) June 23, 2023
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து நேற்று இரவு ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்குகிறது!
எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
குடியரசுத் தலைவராக பழங்குடியின பெண் இந்தியாவை வழிநடத்துகிறார் – அமெரிக்காவில் மோடி பெருமிதம்
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, பல்வேறு துறைசார்ந்த பிரபலங்கள், தொழிலதிபர்களை சந்தித்த பிறகு, அமெரிக்க அதிபர் பைடனுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். ஜனநாயகத்தின் தாய் நாடாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவில் பெண்களின் முன்னேற்றம் அதிகரித்துள்ளதாகவும், பாதுகாப்புப் படையில் இந்திய மகளிரின் பங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரம் பழங்குடியின பெண் ஒருவர், குடியரசுத் தலைவராக இந்தியாவை வழிநடத்துவதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க சென்ற ஐவர் குழு உயிரிழந்து விட்டதாக அறிவிப்பு……
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைடானிக் கப்பலை சுற்றிப்பார்க்க சென்ற சிறிய நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
398வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- First Published :
GIPHY App Key not set. Please check settings