வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி…
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து மும்பை சென்ற ரயிலில் தீ விபத்து…
சென்னையிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அச்சமடைந்த பயணிகள் ரயிலிருந்து இறங்கி தப்பி ஓடினர்.
#BREAKING சென்னை: ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து#Chennai #TrainFireaccident #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/4R9oo2J2JH
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 22, 2023
லியோ பாடல் வெளியானது…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
பீகாருக்கு புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்…
பீகாரில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் பீகாருக்கு புறப்பட்டார்.
வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவருக்கு முன்ஜாமீன்
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறி சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டுள்ளது.
500 மதுக் கடைகள் மூடல்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு…
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
எதிர்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணிக்கும் ஆம் ஆத்மி…?
பாட்னாவில் நாளை நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு மத்திய அரசு அனுமதி…
சென்னை மெரினா கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
சென்னையில் பல இடங்களில் மழை…
சென்னையில் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, எழும்பூர், முகப்பேர், அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான மழை பெய்துவருகிறது.
15 மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மழை…
நாமக்கல், கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
திருச்சியில் 16 டாஸ்மாக் கடைகள் மூடல்….
500 மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தபடி, திருச்சி மாநகரில் 5 கடைகள் என மாவட்டத்தில் மொத்தம் 16 கடைகள் மூடப்பட்டன.
வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநரின் அறியாமை- அமைச்சர் சேகர் பாபு
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று கூறிய வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநர் உடைய அறியாமையை காட்டுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு : விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் உள்ளதாக கூறி அவரை விடுவிக்கக்கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கின் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கு விசாரனையை வரும் செவாய்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.
ஆட்கொணர்வு மனு : உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி என்.ஆர்.இளங்கோ வாதம்
செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதற்கு காரணம் மாற்று நிவாரணமாக ஜாமீன் கோர முடியும். செந்தில் பாலாஜி ரிமாண்ட் உத்தரவை வெறும் உத்தரவாக மட்டும் பார்க்க கூடாது; செல்லுபடியாக கூடிய உத்தரவா என்பதை பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு – விசாரணை தொடங்கியது..
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் உள்ளதாக கூறி அவரை விடுவிக்கக்கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவத்தி அமர்வில் தொடங்கியது.
கைது செய்தபோது சட்ட விதிகள் பின்பற்றவில்லை : செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம்
ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவையும், அமர்வு நீதிமன்ற உத்தரவையும் எதிர்த்து அமலாக்கப்பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை நீதிபதிகளிடம் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சுட்டிக்காட்டினார்.
மேலும் கைது செய்த போது சட்ட விதிகள் பின்பற்றவில்லை எனவும், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக கருதக் கூடாது – அமலாக்கத்துறை வாதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் உள்ளதாக கூறி அவரை விடுவிக்கக்கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவத்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக கருத கூடாது என அமலாக்கத்துறை தனது வாதத்தை முன்வைத்துள்ளது.
மயானங்கள் அனைத்தும் சுத்தமாக பாராமரிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தல்
மயானங்கள் அனைத்தும் சுத்தமாக, பசுமை மயானங்களாக இருக்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பல இடங்களில் மயானங்கள் மற்றும் சுடுகாடுகள் அனைத்தும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. ஏற்கனவே உயிரிழந்த மக்களை சிரமத்திற்கு ஆளாக்காத வகையில், தூய்மையாகவும், நேர்த்தியாகவும், புதைகுழிகள் மற்றும் சுடுகாடுகளை அமைக்க அரசு ஆர்வமாக உள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் என்று தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் நடிகர் விஜய்… லியோ படத்தின் First Look வெளியானதால் ரசிகர்கள் குஷி
நடிகர் விஜய்யின் 69வது பிறந்த நாளையொட்டி லியோ படத்தின் First Lookஐ படக்குழு வெளியிட்டுள்ளது.
வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் புரோமோ நேற்று முன்தினம் வெளியான நிலையில், அப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் போஸ்டர் வெளியானது.
#LeoFirstLook pic.twitter.com/zephjhBVbu
— Vijay (@actorvijay) June 21, 2023
நெடுந்தீவு அருகே 21 தமிழக மீனவர்கள் கைது!
நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 3 விசைப்படகுகளும் அதிலிருந்த 21 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது. இதையடுத்து கைதானவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- First Published :
GIPHY App Key not set. Please check settings