இம்தியாஸ் அலி இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஃபஹத் ஃபாசிலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தி திரையுலகில் காதல், பயணம், இசை சார்ந்த படங்களை இயக்கி, அதில் வெற்றி பெற்றவர் இம்தியாஸ் அலி. ‘ஜப் வி மெட்’, ‘லவ் ஆஜ் கல்’, ‘ராக்ஸ்டார்’, ‘தமாஷா’, ‘ஹைவே’ உள்ளிட்ட இவருடைய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது தனது படத்துக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறார் இம்தியாஸ் அலி. இதில் ஃபஹத் ஃபாசிலை நாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இந்தக் கூட்டணி இதுவரை இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறது.
இந்தப் படத்தின் கதையும் முழுக்க காதலை மையப்படுத்தியே எழுதியிருக்கிறார் இம்தியாஸ் அலி. தற்போது ஃபஹத் ஃபாசிலுக்கு நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பினைத் தொடங்கி, அதே ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு.
GIPHY App Key not set. Please check settings