இப்போக்கூட தென்னிந்திய அளவுல நடந்த குதிரையேற்ற போட்டியில தங்கம் வென்றேன். தாத்தா ரொம்பவே சந்தோஷப்பட்டார். எப்பவும் “உன்னை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு. நம்ப குடும்பப் பேரைக் காப்பத்தணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பார். இன்னும் சாதிக்கணும்ங்குற தன்னம்பிக்கையை உருவாக்கும் விதமா இருக்கும் அவரோட அணுகுமுறை.
தாத்தாக்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயமே அவரோட தைரியம்தான். தாத்தாவைப் பார்க்க வீட்டுக்கு அரசியல்வாதிகள் வந்தாங்கன்னா, சின்ன வயசுல நான் பயப்படுவேன். அந்த பயத்தைப் போக்கணும்ங்குறதுக்காக என்னை மடியில உட்கார வச்சுப் பேசுவார். அதனாலேயே, எனக்கும் அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு வந்துடுச்சு” என்று தனக்குள் இருக்கும் அரசியல் ஆர்வத்தை நம்மிடம் வெளிப்படுத்தும் சமணா, “அப்பாவோட மறைவுக்குப் பிறகு தாத்தா என்னிடம் அதிகமாகப் பேச ஆரம்பிச்சார். அவர்க்கிட்ட, அரசியலுக்கு வரப்போகிற என்னோட ஆர்வத்தை வெளிப்படுத்தினபோது ரொம்ப ஆச்சர்யப்பட்டார்.
என்னிடமிருந்து அப்படிப்பட்ட ஆர்வத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லை. ‘விளையாட்டுல நீ தைரியமா சாதிச்சமாதிரி, அரசியலிலும் நீ சாதிப்ப’ன்னு சொன்னவர், ‘அரசியலிலும் துணிவு ரொம்ப முக்கியம். அதேமாதிரி, மக்களை அணுகுவதில் கனிவு, பணிவு ரொம்ப முக்கியம்’னு சொன்னார். ஒவ்வொரு ஓட்டும் ஒருவர் உன் மீது வைக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு நாம துரோகம் பண்ணிடக்கூடாது. அவங்களோட அந்த நம்பிக்கையை எப்போதும் உண்மையாக்கிக்கிட்டே இருக்கணும்னு சொல்வார். அவரும் அப்படித்தான் வாழ்ந்து காட்டினார். எங்க குடும்பத்துக்கு மட்டுமில்ல, அவரோட மறைவு மக்களுக்கும் பேரிழப்பு.
GIPHY App Key not set. Please check settings