in

ஊட்டி: துணி துவைக்கச் சென்ற தாய்; தந்தையால் 5 மாதக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!


நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஓல்டு ஊட்டி எனப்படும் பழைய ஊட்டியைச்‌ சேர்ந்தவர்கள் பிரேம், ரம்யா தம்பதி. இருவருக்கும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு தற்போது 5 மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. பிரேம்‌‌ கூரியர் நிறுவனம்‌ ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். ரம்யா குழந்தையைப் பராமரித்து வந்துள்ளார். வழக்கம்போல நேற்று காலை பிரேம் வேலைக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் குழந்தை எழாமல் இருந்த நிலையில், சந்தேகமடைந்த தாய் ரம்யா, குழந்தையை எழுப்ப முயற்சி செய்திருக்கிறார். எந்த அசைவும் இல்லாமல் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கதறியிருக்கிறார். அக்கம் பக்கத்தினரின்‌ உதவியுடன் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரிக்கு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.

உயிரிழந்த குழந்தை உயிரிழந்த குழந்தை

உயிரிழந்த குழந்தை

குழந்தையைப்‌ பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அந்த குழந்தை இருந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட தாய் ரம்யா உட்பட உறவினர்கள் அனைவரும் கதறியுள்ளனர். குழந்தையின் கண்ணங்கள் வழக்கத்திற்கு மாறாக சிவந்து காணப்பட்டதைக் கண்ட மருத்துவர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தந்தை பிரேம் குழந்தையின் கண்ணங்களில் தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக குழந்தை இறந்ததை உறுதி செய்துள்ளனர். கொலை வழக்காக மாற்றி தந்தை பிரேமை கைது செய்துள்ளனர்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Paradise Review: இது சீதையின் பார்வையில் ராமாயணமா? இலங்கை அரசியலை எடுத்துரைக்கும் டிராமாவா? | Darshana Rajendran and Roshan Mathew’s Paradise Movie Review

Happy Couple: உங்க மனைவிக்கு உங்களை ரொம்ப பிடிக்கணுமா..? | காமத்துக்கு மரியாதை – 179