இதையடுத்து சமூக ஆர்வலர் சசிகுமார் என்பவர் மூலம் மெரினா கடற்கரையிலிருந்த உமாவையும் அவரின் மகனையும் குடும்பத்தினர் கண்டறிந்நதனர். பின்னர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரும் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை போலீஸார், உமாவிடம் விசாரணை நடத்தியபோது வட்டி பணம் கொடுக்காததால் தற்கொலை செய்ய முடிவு செய்து சென்னை வந்த தகவலை தெரிவித்தார். இதையடுத்து உமாவுக்கு அறிவுரை கூறிய போலீஸார், அவரையும் அவரின் மகனையும் ரயில் மூலம் கோவைக்கு திரும்பி அனுப்பினர். கோவை சென்ற உமாவை அவரின் அம்மாவும் உமாவின் மகளும் கட்டித்தழுவி கதறி அழுத காட்சி காண்பவர்களின் கண்களை கலங்க செய்தது. இதற்கிடையில் வட்டி விவகாரத்தில் உமா சென்னை வந்த தகவலைக் கேள்விப்பட்ட வட்டிக்கு பணம் கொடுத்த விஜயகுமார், உமாவை போனில் தொடர்பு கொண்டு சமரசமாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து உமாவிடம் பேசினோம். “தற்கொலை செய்து கொள்ளும் முடிவில்தான் வீட்டிலிருந்து கால்போன போக்கில் சென்றேன். கோவை ரயில் நிலையத்துக்கு வந்தபோது அங்கு நின்ற ரயிலில் ஏறினேன். அப்போது என்னை பின்தொடர்ந்து வந்த என்னுடைய மகனும் அந்த ரயிலில் அடம் பிடித்து ஏறினான். இதையடுத்து அந்த ரயிலில் சென்னை வந்திறங்கினேன். என்னுடைய செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டதால் யாரும் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில்தான் மெரினா கடற்கரைக்குச் சென்றேன். ஆனால் என்னுடைய மகனின் முகம்தான் என்னுடைய முடிவை மாற்றியது. கோவைக்கு திரும்பி சென்றால் மீண்டும் வட்டி பணம் கேட்டு தொல்லை செய்வார்கள் என கருதி சென்னையிலேயே கடந்த 5 நாள்களாக தங்கியிருந்தேன். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு தூங்கி விட்டு காலையில் மெரினாவில் கடற்கரை அலையை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் என்னுடைய அம்மா, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் உதவியுடன் என்னைக் கண்டுபிடித்து விட்டார். அதனால் மீண்டும் கோவைக்கு சென்று விட்டேன். நிச்சயம் லோடு ஆட்டோ ஓட்டி என்னுடைய கடனை அடைத்து விடுவேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
GIPHY App Key not set. Please check settings