சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த போக்குவரத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. இவரது கணவர் அறிவுக்கரசு. இந்த தம்பதியினர் தங்கள் மகன் திருமணத்திற்காக உறவினர் வீட்டிற்கு அழைப்பிதழ் வைத்துவிட்டு திண்டுக்கல்லிருந்து ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில், சுமதியை ஒரு சில மர்ம நபர்கள் மதுபோதையில் தவறாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அப்பொழுது, பாதுகாப்பிற்காக சுமதி கால்களால் எட்டி உதைத்துள்ளார். மது போதையில் இருக்கும் நபர்களை தாக்கினால் பிரச்னை ஏற்படும் என்று கூறி, பேருந்து நடத்துனர் போலீஸாரிடம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கரூர் பேருந்து நிலையத்தில் புகார் அளிப்பதற்காக போலீஸாரை தேடி அலைந்துள்ளார். சி.சி.டி.வி ரோந்து வாகனத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவதிக்குள்ளாகி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து காவல் உதவி மையம் 100-க்கு போன் செய்து புகார் தெரிவித்த நிலையில், சிறிது நேரம் கழித்து அப்பகுதிக்கு போலீஸார் வந்ததாகச் சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் ஒரு போலீஸார்கூட இல்லாததால் புகார் தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, சுமதியை சேலம் மார்க்கமாகச் செல்லும் பேருந்தில் போலீஸார் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால், கரூர் பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
GIPHY App Key not set. Please check settings