in

கார்களுக்கு நடுவே பாய்ந்த புலி – மிரண்டுபோன சுற்றுலா பயணிகள் – News18 தமிழ்


மலைப்பாதையை வீடியோ செய்தபடி காரில் வந்த சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்காத நேரத்தில் வனத்திலிருந்து சாலையை கடந்த புலி.

உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில்  வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்த புலியால் வாகன ஒட்டிகள் அச்சம். சாலையை கடந்து சென்ற புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்  உதகை அருகே உள்ள கல்லட்டி சாலை வன பகுதி வழியாக செல்லும் மலை பாதையாகும்.  இந்த கல்லட்டி மலை பாதையில் 36 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையை வீடியோ பதிவு செய்தபடி வந்த போது திடீரென வன பகுதியிலிருந்து  புலி ஒன்று சாலையை நோக்கி பாய்ந்து சென்றது.

விளம்பரம்

இதனால் வாகனத்தில் வந்தவர்கள் பீதி அடைந்தனர். கண்ணிமைக்கும்  நேரத்தில் பாய்ந்த புலியை வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்த போது புலி சாலையை கடந்தது பதிவானது.  இந்த வீடியோ தற்போது சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர் : அய்யாசாமி (நீலகிரி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Tamil News Live Today: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின்… இன்று விசாரணை! – செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?! | Tamil News Live Today live updates dated 14-02-2024

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட சோனியா, ரேபரேலி தொகுதியில் களமிறங்க பிரியங்கா திட்டம் | Priyanka plans to contest Rae bareli constituency