புதுச்சேரி: ‘குரங்கு பெடல்’ திரைப்படம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, அலையன்ஸ் பிரான்சே இணைந்து நடத்தும் இந்திய திரைப்பட விழா வரும் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை நடக்கிறது. புதுவை அரசின் சிறந்த திரைப்படமாக ‘குரங்கு பெடல்’ திரைப்படம் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் விழாவை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து ‘குரங்கு பெடல்’ திரைப்பட இயக்குநர் கமலக்கண்ணனுக்கு 2022-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை வழங்குகிறார்.
‘‘குரங்கு பெடல்’ திரைப்பட இயக்குநர் கமலக்கண்ணன் சிறப்புரையாற்றுகிறார். விழா நிறைவில் ‘குரங்கு பெடல்’ திரைப்படம் திரையிடப்படுகிறது.
தொடர்ந்து 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நாள் தோறும் ஒரு பிராந்திய மொழி திரைப்படம் மாலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது. 5-ம் தேதி சனிக்கிழமை ‘ஆர்ஆர்ஆர்’ (தெலுங்கு), 6-ம் தேதி ‘அரியிப்பு’ (மலையாளம்), 7-ம் தேதி ‘டானிக்’ (வங்காளம்), 8-ம் தேதி ‘மேஜர்’ (இந்தி படங்கள் திரையிடப்படுகிறது. இத்திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்.
GIPHY App Key not set. Please check settings