in

சாப்பிட சென்ற ஓட்டுநர்; போதையில் பஸ்ஸை இயக்கி நூடுல்ஸ் கடையில் மோதிய இளைஞர் – அறந்தாங்கி அதிர்ச்சி! | police arrested a youth who drove a bus and made accident


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் கே.பி.எல் என்ற தனியார் பேருந்தை சாவியோடு நிறுத்திவிட்டு, பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அந்த தனியார் பேருந்தை ரகு வேங்கி ராமன் என்ற இளைஞர் போதையில் பேருந்து நிலையத்திலிருந்து கட்டுமாவடி முக்கம் வழியாக ஓட்டிச் சென்றுள்ளார். அந்தப் பேருந்தை எல்.என்.புரம் பகுதியில், நின்று கொண்டிருந்த கார் மற்றும் அருகில் உள்ள சிக்கன் நூடுல்ஸ் கடைமீது மோதி வாகன விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியான அருகில் இருந்தவர்கள் உடனடியாக பேருந்தை இயக்கிய நபரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஆவுடையார் கோவில் தாலுகா கிடங்கிவையல் பகுதியைச் சேர்ந்த ரகு (வயது 32) எனத் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து, விசாரணை செய்ததில், “பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் சாவியை வண்டியிலேயே வைத்ததால், அதை பார்த்த எனக்கு பேருந்து ஓட்ட ஆசையாக இருந்தது. அதனால், பேருந்தை இயக்கி ஓட்டி வந்தேன்” எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரகு ரகு

ரகு
தே.தீட்ஷித்

அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அறந்தாங்கி போலீஸார், காவல் நிலையத்துக்கு மது போதையில் இருந்த அந்த நபரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், “இரவு நேரத்தில் பேருந்துகளை நிறுத்தும் பேருந்து ஓட்டுநர்கள் சாவியை எடுத்து பத்திரப்படுத்தினால் மட்டுமே இது போன்ற விபத்தை தடுக்க முடியும். குறிப்பாக, 5 மாதங்களுக்கு முன்பு டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை மனநிலை பாதிக்கப்பட்ட நபர் 50 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தினார். இந்த தனியார் பேருந்தை இயக்கிய நபர் கார் மற்றும் நூடுல்ஸ் கடைமீது மோதியதால், லேசாக விபத்து ஏற்பட்டது. அருகில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது” என்றனர், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

காதல் திருமணம் செய்துகொண்ட மகன்; டார்ச்சர் செய்த மருமகள் வீட்டார்… விபரீத முடிவெடுத்த பெண்! | police investigating the suicide case of a woman in kulithalai

ஜேடியு – தெலுங்கு தேசம் இடையே கருத்து வேறுபாடு: மக்களவை தலைவர் பதவிக்கு போட்டியிட இண்டியா கூட்டணி திட்டம் | INDIA bloc targets for speaker post