in

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்… ரூ. ஒரு லட்சம் மானியம், ஜிபிஎஸ் கருவி! | Pink Auto Project to ensure women’s safety and self-employment


நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவை தேர்தலால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கிய நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான மானியக் கோரிக்கையில், அமைச்சர் கீதா ஜீவன் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

சென்னையில், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் நோக்கிலும், பெண்களில் 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், 2 கோடி ரூபாய் மானியத்தில், 200 பிங்க் ஆட்டோக்கள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பிங்க் ஆட்டோ திட்டம்பிங்க் ஆட்டோ திட்டம்

பிங்க் ஆட்டோ திட்டம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பயணம் செய்ய வேண்டிய சூழலில், அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இளஞ்சிவப்பு நிறத்திலான இந்த ஆட்டோக்களில், பெண்களுக்கான இலவச ஹெல்ப்லைன் நம்பர் ஒட்டப்படுவதோடு, ஆட்டோக்களின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறியும் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிங்க் ஆட்டோக்கள் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மாநிலங்களவையின் அவை முன்னவராக ஜெ.பி.நட்டா நியமனம் | BJP chief JP Nadda replaces Piyush Goyal as Leader of House in Rajya Sabha

“அவரிடம் மன்னிப்புக் கோருகிறேன்” – வைரல் வீடியோ குறித்து நாகர்ஜுனா | Nagarjuna Issues Apology After Viral Video Shows His Bodyguard Pushing fan