in

சென்னை: ஆன்லைன் ஆப் மூலம் அறிமுகம்… நம்பி சென்றவருக்கு நேர்ந்த சோகம்!


சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலை நவரத்தின காலனியில் வசித்து வருபவர் சுரேஷ் (56). இவர் வடபழனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். சினிமா துறையில் பணியாற்றி வருகிறேன். இந்தநிலையில் ஆன்லைன் ஆஃப் (online APP) மூலம் சுல்தான் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நானும் சுல்தானும் பேசி வந்தோம். அப்போது சுல்தான், நேரில் சந்திக்கலாம் என்று என்னிடம் கூறினார். உடனே நான், எங்கு வர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு சுல்தான், வடபழனி கோயில் குளம் அருகே கடந்த 15-ம் தேதி இரவு 9 மணிக்கு வரும்படி தெரிவித்தார். அதனால் நான் பைக்கில் அந்த இடத்துக்குச் சென்றேன். அங்கு சுல்தானை சந்தித்து பேசினேன். அப்போது . அவர், என்னிடம் தன்னுடைய உண்மையான பெயர் மாதவன் என்று கூறினார்.

லோகு

பின்னர் தன்னுடைய வீடு பக்கத்தில்தான் இருக்கிறது என்று கூறிய அவர், என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நானும் சுல்தானும் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சுல்தான், போனில் பேசினார். சிறிது நேரத்தில் மூன்று பேர்கள் அங்கு வந்தனர். அவர்கள் என்னிடம், `நீ என்ன மாதவனிடம் தப்பா நடக்க பார்க்கிறாயா?’ என்று கூறி என்னை கட்டையால் அடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி என்னை வெளியில் விடாமல் சேரில் அமர வைத்தனர். அதன்பிறகு பணம் கேட்டு மிரட்டினார்கள். அப்போது நான், என்னிடம் பணம் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர்கள், உன்னுடைய நண்பர்களிடம் பணம் கேள் என்று கூறினார்கள்.

இதையடுத்து நான் நண்பர்களிடம் பணம் கேட்டதும் அவர்கள் எனக்கு பணம் அனுப்பி வைத்தார்கள். அந்தப் பணத்தை அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் என்னுடைய செல்போனிலிருந்து வேறு நபருக்கு அனுப்பி வைத்தான். பின்னர் என்னுடைய பைக், செல்போனை பறித்துக் கொண்டு இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். அதனால் நான் பயந்து போய் புகாரளிக்காமல் இருந்தேன். என்னுடைய நண்பர்கள் கூறியதன் பேரில் 24.6.2024-ம் தேதி புகாரளித்தேன். எனவே என்னை மிரட்டி பணம் பறித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வாசுகி, ஐ.பி.சி 342,392,397,448,506(2), 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வடபழனி போலீஸார் விசாரித்தனர்.

பரத்குமார்

போலீஸார் விசாரணை நடத்தி தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டையைச் சேர்ந்த மாதவன் (21), வடபழனியைச் சேர்ந்த இம்ரான் என்கிற லோகு (20), பரத்குமார் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 16 வயது சிறுவனையும் போலீஸார் பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒரு கத்தி, இரண்டு செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட மாதவன் மீது தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா வழக்கும், லோகு மீது போக்சோ மற்றும் இரண்டு திருட்டு வழக்குகளும் உள்ளன. கைதானவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு | Delhi HC stays trial court order granting bail to Kejriwal in excise policy case

Australia Out From T20 World Cup David Warner Announced Retirement From All Format | டி20 உலக கோப்பை தோல்வி ஓய்வை அறிவித்த முக்கிய ஆஸ்திரேலிய வீரர்