சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியது
கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையே தினசரி ரயில் சேவை இல்லாத சூழல் இருந்து வந்தது. விழுப்புரம் – காட்பாடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக, இந்த ரயில் சேவை தடைப்பட்டது. அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2 ஆண்டுகளில் நிறைவு பெற்றதும், நிறுத்தப்பட்ட ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.
இதனால், திருவண்ணாமலை – சென்னை இடையே மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என பக்தர்கள், வணிகர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தற்போது, சென்னை-திருவண்ணாமலை இடையே ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, வியாழக்கிழமை முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு ரயில் இயக்கப்படுகிறது. தினசரி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், வேலூர், போளூர் வழியாக அடுத்த நாள் நள்ளிரவு 12 : 05 மணிக்கு திருவண்ணாமலையை அடைகிறது.
மறுமார்க்கத்தில் இதே ரயில் அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை ரயில்நிலையத்தை அடைய இருக்கிறது. இந்த ரயில் சேவைக்கு கட்டணமாக 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
GIPHY App Key not set. Please check settings