சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் செயல்பட்டு வரும் கடை ஒன்றின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக Airhub என்ற கடையின் உரிமையாளரும், சென்னையைச் சேர்ந்த யூடியூபருமான முகமது சபீர் அலியும், அவரது கடையில் வேலைபார்த்து வந்த 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
யூடியூப் சேனலை நடத்தி வரும் முகமது சபீர் அலிக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயைச் சேர்ந்த நபர் ஒருவர் மற்றும் அவரது இலங்கையைச் சேர்ந்த கூட்டாளி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மூவரும் இணைந்து, இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது தொடர்பாக திட்டங்களை வகுத்தனர்.
**Also Read :**
வெறும் 9 மாணவர்களுக்கு 8 ஆசிரியர்கள் – இந்த அரசுப் பள்ளி எங்கு இருக்கிறது தெரியுமா?
பின்னர் சென்னை விமான நிலையத்தில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் பரிசுப் பொருட்கள், பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடையை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யூடியூபர் முகமது சபீர் அலி தொடங்கினார். வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் நபர்கள், முகமது சபீர் அலியின் கடையில் இருக்கும் கழிவறையில் வைத்துவிட்டு செல்வார்கள். கடை ஊழியர்கள் அதை எடுத்து விமான நிலையத்திற்கு வெளியே இருக்கும் கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்து வந்தனர். அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் சுமார் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் சபீர் அலியின் கடை மூலமாக கடத்தப்பட்டுள்ளது. இதற்கான சபீர் அலிக்கு ரூ.3 கோடி கிடைத்துள்ளது.
சபீர் அலியின் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அடையாள அட்டையை வைத்திருந்ததால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது அடிக்கடி சோதனையில் இருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து, தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
.
GIPHY App Key not set. Please check settings