in

சென்னை தி. நகரில் ஶ்ரீபத்ராசல ராமர் தரிசனம்… 1008 புடவை அர்ச்சனை, வில்லிசை, பக்திப் பாடல்கள்! | sri bhadrachala ramar darshan at t nagar


இந்த நிகழ்வை பக்த பாரத சேவை அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பஜனைகள், உபன்யாசம், விசேஷ பூஜைகள் என நாள் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா அரங்கில் பிரமாண்டமான பகவான் ஸ்ரீ பத்ராசல ராமர் சீதை மற்றும் லட்சுமணன் திருமேனிகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் 20 அடி உயர விஸ்வரூப அனுமன் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. விஸ்வரூப அனுமன் சிலையை பக்தர்கள் சிலிர்ப்போடு வழிபட்டுச் சென்றனர்.

ஶ்ரீபத்ராசல ராமர்ஶ்ரீபத்ராசல ராமர்

ஶ்ரீபத்ராசல ராமர்

(28.6.24) காலை சுப்ரபாதத்துடன் விழா தொடங்கியது. “ஶ்ரீராமப் பிரபாவம்’ என்னும் தலைப்பில் அனந்த பத்மநாப சுவாமிகள் உரையாற்றினார். தொடர்ந்து பஜனைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. மாலை 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் தி.நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். (29.6.24) காலை 7.30 மணிக்கு அக்காரக்கனி ஶ்ரீநிதி, பத்ராசல ராமதாசர் குறித்த உபன்யாசம் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து, காலை 10. 30 மணி முதல் 12 வரை ஶ்ரீசீதா தேவிக்கு 1008 புடவை அர்ச்சனை செய்யப்பட்டது. மாலை 5 – 7 மணிக்கு பாரதி திருமகனின் வில்லிசையும் நித்யஶ்ரீ மகாதேவனின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டம்: டெல்லி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு | First case under new penal code Bharatiya Nyaya Sanhita registered in Delhi against street vendor

Dinesh Karthik RCB: அடிதூள் – ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்