in

சென்னை: பக்கத்து வீட்டிலுள்ளவர்களைப் பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் – தஞ்சை இளைஞர் சிக்கியது எப்படி? | bomb threat to airlines case, youth arrested


சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள இன்டிகோ ஏர்லைன்ஸின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு கடந்த 18-ம் தேதி இரவு ஒரு மிரட்டல் வந்ததது. அதில் சென்னை – மும்பை விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வெடிகுண்டு அரவு 9.45 மணிக்கு வெடிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக இன்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள், இந்தத் தகவலை சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இன்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகாரளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி உத்தரவின்பேரில் சைபர் க்ரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சேட்டிங் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (27) என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிரசன்னாவிடம் விசாரித்தபோது சென்னை பெரம்பூரில் வசித்த போது பக்கத்து வீட்டில் வசித்த ஒரு குடும்பத்தினருடன் விரோதம் ஏற்பட்டது. அதனால் அந்தக் குடும்பத்தினரைப் பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல விடுத்ததாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பிரசன்னாவை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Sex Vs Making Love: என்ன வித்தியாசம், புரிந்துகொண்ட பின்னர் வாழ்க்கை எவ்வாறு மாறும்?! I Difference Between Sex And Making Love | Secrets of Romance

சென்னை: தாய், தம்பியைக் கொலை செய்த கல்லூரி மாணவன் – போலீஸாரிடம் சிக்கியது எப்படி? – Son arrested for murder his mother and younger brother