சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் தரமற்றதாக இருப்பதாக அந்த குடியிருப்பில் உள்ள மக்கள் புகார் அளித்ததை அடுத்து, இதுபற்றிய விவாதங்கள் அப்போதைய சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டுதான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது தெரியவந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுதியது.
இந்நிலையில் புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பி லிஃப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவலின் படி, 10 வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதில் கணேசன் என்ற 52 வயது மதிக்கதக்க நபர் உயிரிழந்ததாகவும், கணேசன் பத்தாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு லிஃப்டின் செல்லும்போது லிஃப்ட் அறுந்து மேலிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பேசின் பிரிட்ஜ் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முறையான பராமரிப்பு இல்லாததே இதுபோன்று விபத்துக்கள் நடக்க காரணம் என அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
GIPHY App Key not set. Please check settings