இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி பேங்க் தனது வாடிக்கையாளர்களால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சேவைகளை பயன்படுத்த முடியாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி பேங்க் தனது தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்துகிறது. இந்த தொழில்நுட்ப மேம்பாடு நடைபெறும் நேரத்தில் ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களால் குறிப்பிட்ட சில சேவைகளை பயன்படுத்த முடியாது.
ஜூலை 13-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஹெச்.டி.எஃப்.சி பேங்க் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த நேரத்தில் மட்டும் வாடிக்கையாளர்களால் சேவைகளை பயன்படுத்த முடியாது. ஜூலை 13-ம் தேதி மாதத்தின் இரண்டாம் சனிக் கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட நேரத்தில் எந்தெந்த சேவைகளை பயன்படுத்த முடியும்?
எந்தெந்த சேவைகளை பயன்படுத்த முடியாது?
-
நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகிய சேவைகளை அதிகாலை 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை பயன்படுத்த முடியாது.
-
அதிகாலை 3 மணி முதல் 3:45 மணி வரையிலும், காலை 9:30 மணி முதல் பகல் 12:45 மணி வரையிலும் யு.பி.ஐ (UPI) சேவைகளை பயன்படுத்த முடியாது.
-
மற்றவர்களுக்கு பணம் அனுப்ப (Money transfer) முடியாது.
-
Forex Card மற்றும் INR Card சேவைகளை அதிகாலை 3 மணி முதல் 3:45 மணி வரை பயன்படுத்த முடியாது.
எனவே, ஹெச்.டி.எஃப்.சி பேங்க் வாடிக்கையாளர்கள் இதற்கு ஏற்ப முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
GIPHY App Key not set. Please check settings