ஜெய்ப்பூரைச் சேர்ந்த தந்தை, மகன் இரண்டு வருடங்களுக்கு முன்பு 300 ரூபாய் மதிப்புள்ள போலி நகையை, விலை உயர்ந்த வைர நகை எனக் கூறி அமெரிக்க பெண்னை ஏமாற்றி ரூ.6 கோடிக்கு விற்பனை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அமெரிக்க குடியுரிமை பெற்ற செரிஷ் என்ற பெண் 2022-ல் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்தபோது, ஜெய்ப்பூர் மாநிலத்தில் வியாபார சந்தைகளுக்கு பெயர் பெற்ற ஜோஹ்ரி பஜார் பகுதிக்கு சென்றிருக்கிறார்.
அங்கு தந்தை , மகனான கௌரவ் சோனி மற்றும் ராஜேந்திர சோனி நகைக்கடை ஒன்றை நடத்தி வந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் செரிஷிடம் ஒரு நகையைக் காண்பித்து, “இது மிகவும் விலை உயர்ந்த வைர கற்களை கொண்டு செய்யப்பட்ட நகை. சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என ஆசை வார்த்தைகளைக் கூறி அதை வாங்கும்படி தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் சொன்னதை நம்பி அந்த நகையை ரூ.6 கோடிக்கு விலை பேசி வாங்கியிருக்கிறார் செரிஷ்.
GIPHY App Key not set. Please check settings