தி.மு.க-வைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஏற்கெனவே ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, குஷ்பு ஆகியோரை பொதுக்கூட்ட மேடையில் தவறாகப் பேசியதற்காகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட சிவாஜி, தி.மு.க-வுக்கு தேர்தல் பிரசாரங்களும் மேற்கொண்டார். இந்த நிலையில், தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனை இழிவுபடுத்தி பேசியதாகவும், அவரைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யுமாறும் பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “தி.மு.க-வின் அதிகாரபூர்வ பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆகியோர் பற்றி அருவருக்கத்தக்க வகையில், ஆபாசமாகப் பேசியது பெரும் சர்ச்சையானது. இது தமிழகத்தில் குறிப்பாக பெண்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி அவரை தி.மு.க அரசு கைதுசெய்தது. அவரை கட்சியிலிருந்து நீக்கியதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு நாடகமாடினார்கள். ஆனால், சில மாதங்களில் மீண்டும் தி.மு.க-வில் சேர்த்துக் கொண்டு விட்டார்கள். அவர்மீதான சட்ட நடவடிக்கை என்ன ஆனதென்று தெரியவில்லை.
GIPHY App Key not set. Please check settings