in

தாவூத் கூட்டாளி; நாடு முழுக்க போதைப்பொருள் வர்த்தகம் – ரூ.328 கோடி போதைப் பொருளுடன் 15 பேர் கைது | Drug trade led by Dawood Ibrahim accomplice: 15 arrested with drugs worth Rs 328 crore


மகாராஷ்டிராவில் எம்.டி.எனப்படும் போதைப்பொருள் அதிக அளவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படுவது கடந்த சில மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போதைப் பொருளை மருந்து கம்பெனிகள் மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகளில் எளிதில் தயாரித்துவிட முடியும். இந்த போதைப்பொருளை தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக மகாராஷ்டிரா முழுக்க 10க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளும் ஈடுபட்டிருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. கடந்த மே மாதம் 15ம் தேதி மும்பை காஷ்மீரா போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வசாய் பகுதியில் ஒரு கிலோ எம்.டி.போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை கடத்திய சோயப் மேனன், நிகோலஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தெலங்கானாவில் எம்.டி.போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இருப்பது தெரிய வந்தது.

உடனே அங்கு ரெய்டு நடத்தி தொழிற்சாலை உரிமையாளர் தயானந்த் மற்றும் அவரின் கூட்டாளி நாசர் ஷேக் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.25 கோடி மதிப்புள்ள எம்.டி.போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வசாய்-விரார் போலீஸ் கமிஷனர் மதுக்கர் பாண்டே கூறுகையில், “‘தயானந்த் பாண்டேயிடம் விசாரணை நடத்தி தெலங்கானாவை சேர்ந்த மொஹமத் மொஹின் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட முயன்ற போது பிடிபட்டார். மேலும் விசாரணை நடத்தியதில் சூரத்தை சேர்ந்த ஜுல்பிகர் கோதாரி என்பவரும் கைது செய்யப்பட்டாரார்.

அவர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி சலீம் தோலா கட்டளைப்படி படி போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் விற்பனை செய்து வைத்திருந்த 11 லட்சம் ரூபாய் அவனிடமிருந்து பிடிபட்டது. மேலும் மும்பை பெண்டி பஜாரில் எம்.டி போதைப்பொருள் விற்பனை செய்தது தொடர்பாக முஸ்தாபா மற்றும் உசேன் பர்னீச்சர்வாலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சலீம் தோலா மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தில் வந்திருந்த 7 லட்சம் ரூபாய் முஸ்தாபாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடத்தி உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் என்ற இடத்தில் 300 கோடி மதிப்புள்ள எம்.டி. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது”என்று தெரிவித்தார். மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மகா., சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.1,898 கோடி நிதி – பாஜக, அஜித் பவார் தரப்பு ஆலைகளுக்கு வழங்கப்படுகிறதா?!| Rs 1898 crore to sugar mills of BJP and NCP politicians

Big Plan By Team India Against Zimbabwe IND vs ZIM 1st T20 Playing XI Prediction | இந்திய அணியின் பிளேயிங் லெவன்… ஜிம்பாப்வே போட்டியில் இதுதான் பிளான்!