in

தூத்துக்குடி: சொத்தை விற்று பணம் தர மறுத்த தந்தை… கார் எற்றி கொடூரமாக கொலை செய்த மகன்! | Son kills father by car for not giving money that got through property sold


இந்த நிலையில், கருப்பசாமி, காலை 7 மணியளவில்  தன் வீட்டில் இருந்து சவலாப்பேரி செல்லும் ரோடு வழியாக தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில் வந்த சின்னதுரை, கருப்பசாமி மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி கை, கால்களில்  அடிபட்டு பலத்த காயமடைந்தார். கருப்பசாமி மீது மோதிய சின்னதுரை அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை  அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

புளியம்பட்டி காவல் நிலையம்புளியம்பட்டி காவல் நிலையம்

புளியம்பட்டி காவல் நிலையம்

இதனையடுத்து சின்னதுரையை புளியம்பட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், தனக்கு தெரியாமல் தோட்டத்தில் 2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ததாலும், விற்பனை செய்த பணத்தை தன்னிடம் தர மறுத்ததாலும் ஆத்திரத்தில் கார் ஏற்றி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கைது செய்யப்பட்ட சின்னதுரை, சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.    

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சென்னை: கொலை செய்யப்பட்டு அடையாறு ஆற்றில் வீசப்பட்ட ரௌடி கருப்பு ஆகாஷ் – போலீஸ் விசாரணை | rowdy murdered in chennai and body thrown in adyar river

`யானை வழித்தடங்களை ஈஷா மறைத்திருக்கிறதா?' – நேராகவே கேட்ட துரைமுருகன்… சமாளித்த வனத்துறை அமைச்சர்!