in , ,

தைப்பூச விழா கொண்டாட்டம்…….மொரீஷியஸில்

தைப்பூச விழா கொண்டாட்டம்: மொரீஷியஸில் பக்திப் பாடல்கள் பாட 7 பேர் குழு…தமிழக அரசு ஏற்பாடு செய்து அனுப்பியது

மொரீஷியஸில் உள்ள முரு​கன் கோயில்​களில் நடை​பெறும் தைப்பூச விழா​வில் தமிழ் பக்​திப் பாடல்​களை பாட 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அனுப்​பி​யுள்​ளது.

ஆப்​பிரிக்க கண்​டத்​தில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். இதன் மக்​கள்​தொகை 12 லட்​சம். இந்​திய வம்​சாவளி​யினர் இங்கு அதி​க​மாக உள்​ளனர். குறிப்​பாக தமிழர்​கள் அதி​க​மாக வசிக்​கின்​றனர்.

அங்கு கரும்​புத் தோட்​டங்​கள் மற்​றும் கட்​டு​மானப் பணி​களில் வலு​வான அடித்​தளமிட்ட இவர்​கள், இந்து சமய அடை​யாளத்​துடன் தைப்பூச விழாக்​களை​யும், தமிழ் மொழியை​யும் தற்​காலத்​தி​லும் சிறப்​பாகக் காத்து வரு​கின்​றனர். அரசி​யலிலும் முக்​கிய பங்​காற்​றுகின்​றனர்.

இந்த ஆண்டு வரும் பிப். 1-ம் தேதி தைப்பூச விழா மொரீஷியஸில் நடை​பெற உள்​ளது. 10 நாள் விரதம், கொடியேற்​றம் மற்​றும் பூக்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட காவடிகள் இத்​திரு​விழா​வின் சிறப்பு அம்​சங்​களாகும்.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஜனநாயகன் வழக்கு ……

தங்கம் விலை குறைவு! 27/01/2026