பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி வயது 23. அதே பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் வயது 18. இதில் பாரதி 11 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி பழகியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிறுமி தனியாக வீட்டில் இருந்த போது அதை பயன்படுத்தி அங்கு சென்ற பாரதி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சிறுமியும் பயத்தில் இதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேறு வாடகை வீட்டிற்கு சிறுமியின் குடும்பம் சென்றதாக தெரிகிறது. அந்த வீட்டையும் தெரிந்து கொண்ட பாரதி அங்கு சென்று சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்த சிறுமி தன்னுடைய பாதுகாப்பிறாக மதியழகனை அழைத்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கி கொண்ட மதியழகனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டார். இது சிறுமியின் வீட்டிற்கு தெரிய அதிர்ச்சியடைந்தவர்கள், உடனே பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
GIPHY App Key not set. Please check settings