in , ,

“பாசிசம் என்று சொன்ன பாஜக இப்போது பாயாசம் ஆகிவிட்டதா?” – விஜய்க்கு சீமான் கேள்வி

விஜய் மவுனம் ஏன் ?…

“BJP பாசிசம் என்றார்கள். இப்போது பாயாசம் ஆகிவிட்டதா? தற்போது வரை BJP பற்றி எதுவும் பேசாமல் விஜய் மவுனம் சாதிக்கிறார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

NTK சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரகுபதி பீமன், தீனு, ரா.கார்த்திக் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று குன்னூரில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் DMK, ADMK, TVK உள்ளிட்ட கட்சிகள் இலவசம் என்ற பெயரில் உரிமை தொகை எனவும், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை கொடுப்பதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. நாங்கள் வெற்றி பெற்றால் கல்வி மற்றும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்வோம். எனவே, NTK வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நான் ஒருவன் தான் சொல்கிறேன் இலவசம் தரமாட்டேன். இலவசத்திற்கு கையேந்த வைக்கும் நிலையில் உங்களை வைக்க மாட்டேன். நான் வேலை இல்லை என்ற சொல்லை ஒழிப்பேன். வறுமை, ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் ஒழிப்பேன். பசி என்ற சொல்லே இல்லாமல் ஒழிப்பேன். நடிப்பவன் தான் நன்றாக நாடாளுவான் என்று இன்று எண்ணிக் கொண்டிருக்கிறாய்.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை: சொந்த மண்ணில் வெற்றி பெறும் முனைப்பில் சிஎஸ்கே……

பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு வரி விலக்கு…..