முன்னதாக ‘ஹம் தோ ஹமாரே பராஹ்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படம், பின்னர் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் உத்தரவின்படி, ‘ஹமாரே பாரா’ (Hamare Baarah) என மாற்றப்பட்டது. திரைப்படம் வெளியாக ஜூன் 14 -ம் தேதிக்கு மேல் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் திட்டமிட்டபடி ஜூன் 7-ம் தேதியே வெளியிட்டனர்.
இதனையடுத்து, இந்தத் திரைப்படம் இஸ்லாமிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது எனவும், இதனை வெளியிட தடைவிக்க வேண்டும் என கர்நாடக மாநில சிறுபான்மை அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை பரிசீலித்த மாநில அரசு, கர்நாடக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964-ன் கீழ் ‘ஹமாரே பாரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
அந்த உத்தரவில், ’தயாரிப்பாளரும், இயக்குநரும் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் இருக்கும் வாசகங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு வன்முறையான கருத்துகளை திரைப்படத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை அவமதிக்கும் வகையில் சிததிரிக்கும் காட்சிகள், அதே வேளையில் மற்ற சமூகத்தினர்களுக்கிடையே வன்முறையைத் தூண்டிவிட முயற்சிக்கும் காட்சிகளும் உள்ளன.
இந்தத் திரைப்படத்தை வெளியிட அனுமதித்தால் மாநிலத்தில் அமைதி பாதிக்கப்படும். மேலும், மதக் கலவரங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும்வரை கர்நாடகத்தில் திரையிடக்கூடாது’ என அம்மாநில அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings