இலங்கை புத்தளம் கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பிரதீபன். இவர், கடந்த மே மாத இறுதியில் கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். இந்தியாவில் தங்கியிருக்க இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி வரை விசா பெற்றுள்ள இவர், கடந்த மாதம் ஒன்றாம் தேதி ராமேஸ்வரம் வந்துள்ளார். அங்கு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர், பின்னர் வேளாங்கன்னி மற்றும் பெங்களூர் சென்றுள்ளார்.
பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த உமாசெல்வம் என்பவருடன் சேர்ந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கென தங்கச்சிமடம் பேக்கரும்பு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜனை தொடர்பு கொண்டுள்ளனர். தியாகராஜன் மூலம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்க உமாசெல்வம் பணத்தை தயார் செய்துவந்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings