கர்நாடகாவைச் சேர்ந்த 30 வயது விவசாய இளைஞர் ஒருவர், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் தன்னுடைய திருமணத்துக்குப் பெண் பார்த்துத் தருமாறு மனு அளித்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, இத்தகைய மனுவை அளித்தவர் சங்கப்பா என்று தெரியவந்திருக்கிறது. கொப்பல் (koppal) மாவட்டத்தைச் சேர்ந்த இவர் விவசாயம் செய்து வருகிறார். இன்னும் திருமணமாகாததால், கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் இவர் அல்லல்பட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கர்நாடக அரசின் ஜனஸ்பந்தனா மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தின்படி கொப்பல் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நலினி அதுல் பங்கேற்றிருந்த இந்த கூட்டத்தில் சங்கப்பாவும் பங்கேற்று அவரிடம் மனு ஒன்றை அளித்தார்.
GIPHY App Key not set. Please check settings