in

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி – சாதாரண பரிசோதனை என தகவல் | Actor Rajinikanth has been admitted to Hospital


சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் இன்று (அக்.01) அதிகாலை 6 மணியளவில் பரிசோதனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த சூழலில் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘வேட்டையன்’. தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், அக்.02ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிடுகிறது.





Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

65525

GIPHY App Key not set. Please check settings

“படம் முழுக்க என் முகத்தில் புன்னகை” – ‘மெய்யழகன்’ படத்துக்கு நாகர்ஜுனா பாராட்டு | Nagarjuna hails Meiyazhagan Movie

சிபிஐ அதிகாரி போல் நடித்து வர்த்தமான் குழும தலைவர் ஓஸ்வாலிடம் ரூ.7 கோடி மோசடி | Punjab Police Arrests Two In Rs 7 Crore Fraud Involving Vardhaman Group