அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, இந்த வருடம் தனக்குப் பிடித்த பாடல்கள், 10 புத்தகங்கள் மற்றும் 10 திரைப்படங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
அவரது திரைப்பட லிஸ்டில் இந்திய படமான, ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ முதலிடத்தில் இருக்கிறது. பாயல் கபாடியா இயக்கிய இந்தப் படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூண், சாயா கதம் ஆகியோர் நடித்துள்ளனர்.
கேரளாவிலிருந்து மும்பைக்குப் புலம்பெயர்ந்து வாழும் இரண்டு செவிலியர்களின் கதைதான் படம். கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரீ விருது பெற்ற இந்தப் படம், கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings