in

"வரலாற்றை திருத்துவது சரியில்லை; நானும் சபையை வழிநடத்தியிருக்கிறேன்"- சிபிஎம் முன்னாள் பெண் எம்எல்ஏ


தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவல் பணிக்காக தனது அறைக்குச் சென்றபோது, துணை சபாநாயகரும் அவையில் இல்லை. இதனால் மாற்று அவைத் தலைவராக த.வெ.க எம்.எல்.ஏ சத்யபாமா அவையை வழி நடத்தினார். இதையடுத்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா என்றும், த.வெ.க இதை சாதித்து காட்டியது என்றும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதேசமயம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ் தான் இதற்கு முன்பு சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியதாக கூறியுள்ளார். இது குறித்து முன்ளார் எம்.எல்.ஏ லீமாரோஸ் கூறுகையில், “தமிழகத்தினுடைய சட்டமன்றத்தில் த.வெ.க கட்சியைச் சார்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர், நேற்றைய தினம் மாற்று சபாநாயகர் என்கிற பொறுப்பில் சபையை நடத்தியதை பாராட்டுகின்றோம்.

​ஆனால், தமிழகத்தினுடைய வரலாற்றிலே முதன்முறையாக ஒரு பெண் மாற்றுத் தலைவர் சபாநாயகராக இருந்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது, அது உண்மையல்ல.

த.வெ.க எம்.எல்.ஏ சத்யபாமா

2006 – 2011 காலகட்டத்தில் மாற்று சபாநாயகர் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த லீமா ரோஸாகிய நானும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த யசோதா அம்மா அவர்களும் அந்த மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் இருந்தோம். ​நானும் சமூக நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது 2009-ம் ஆண்டு அந்த சபையை மாற்றுத் தலைவர் என்கிற முறையில் வழிநடத்தி இருக்கின்றேன்.

சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யசோதா அம்மா அவர்களும் மாற்றுத் தலைவர் என்கிற முறையில் சபையை வழிநடத்தி இருக்கின்றார்கள். ​எனவே, இது ஏதோ த.வெ.க எம்.எல்.ஏ தான் வரலாற்றிலேயே முதன்முறையாக சபாநாயகராக மாற்றுத் தலைவராக இருந்து சபை வழிநடத்தி இருக்கின்றார்கள் என்ற தவறான தகவலை மாற்ற வேண்டும். வரலாற்றைத் திருத்துவது சரியில்லை” என்றார்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பஸ்ஸை முத்தமிட்டு, டயரை தொட்டு வணங்கி.. 18 ஆண்டுக்கால பணி, நிறைவு – கண்ணீர் பெருக நெகிழ்ந்த ஒட்டுநர்