ஏறக்குறைய ஒரு 3 ஓவருக்கு பவுண்டரியே இல்லாத நிலையெல்லாம் இருந்தது. ஆனாலும் கடைசியில் ஹர்திக் பாண்டியா ஸ்டாய்னிஸின் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்து வேகம் கூட்டியதில் இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது. 20 ஓவர்களில் 205 ரன்களை இந்திய அணி எடுத்தது. ரோஹித் ஆடிய ஆட்டத்திற்கு இது குறைவான ஸ்கோர்தான். இன்னும் ஒரு 20 – 30 ரன்களை இந்திய அணி கூடுதலாக அடித்திருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 206. ஆஸ்திரேலியா சேஸிங்கில் கடும் சவால் அளித்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் ஸ்லிப்பிடம் எட்ஜ் ஆகி கேட்ச். ஆனாலும் ஆஸ்திரேலியா தடுமாறவில்லை. ஹெட், மார்ஷ் கூட்டணி நன்றாக ஆடியது. இந்தியாவுக்கு ரோஹித்தை போல ஆஸ்திரேலியாவுக்கு ஹெட். ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டினார்.
ரன்ரேட்டை 10 க்கு மேலாகவே வைத்துக் கொண்டனர். இந்த கூட்டணி போட்டியை இந்தியாவிடமிருந்து பறிப்பதைப் போல இருந்தது. அப்போதுதான் குல்தீப் யாதவ் திருப்புமுனையை கொடுத்தார். 9வது ஓவரில் நன்றாக வீசி மார்ஷை பவுண்டரி லைனில் கேட்ச் ஆக வைத்தார். அக்சர் படேல் ஒற்றைக் கையில் தாவி இந்த கேட்ச்சை பிடித்து அசத்தினார். கூட்டணி முறிந்தாலும் ஹெட் ஓயவில்லை. அவரின் வேகமும் குறையவில்லை. ஹர்திக்கின் ஓவரிலும் 3 பவுண்டரிகளை அடித்தார். அரைசதம் கடந்தும் அசத்தினார். மேக்ஸ்வெல்லும் வந்த வேகத்தில் ஜடேஜாவின் ஒரு ஓவரில் சிக்ஸரும் பவுண்டரியுமாக அடித்து ரன்ரேட்டை எகிறாமல் பார்த்துக் கொண்டார்.
மேக்ஸ்வெல்லையும் குல்தீப்தான் வீழ்த்தினார். இறங்கி வந்து ஆட முயன்ற மேக்ஸ்வெல்லை போல்டாக்கினார். அக்சர் வீசிய அடுத்த ஓவரிலேயே ஸ்டாய்னிஸூம் காலி. இந்தியாவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஆனால், ஹெட் இன்னும் களத்திற்குள்ளேயே இருந்தார்.
GIPHY App Key not set. Please check settings