காரைக்கால்: காரைக்கால் கடலில் மூழ்கி மாயமான மாணவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரையில் உள்ள அரசு கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் 14 பேர் நேற்று முன்தினம் காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.
பின், திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மாணவி ஹேமாமாலினி, 20; திப்பிராஜபுரம் ரித்தன்யா, 18, ஆகியோர் கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி இருவரும் கடலுக்குள் இழுத்துசெல்லப்பட்டனர்.
அதனை பார்த்த மாணவர்கள் புகழேந்தி, அபிலாஷ், ஜெகதீஸ்வரன், மைக்கல் ஆகியோர் கடலில் இறங்கி மாணவிகளை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அவர்களும் அலையில் சிக்கி தத்தளித்தனர்.
பின், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ரித்தன்யா, புகழேந்தி, மைக்கல் ஆகியோர் மீட்கப்பட்டனர். ஹேமாமாலினி இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
மேலும் கடலில் மாயமான குத்தாலம் தாலுாகா, ஸ்ரீகண்டபுரம் அஜய்குமார் மகன் அபிலாஷ்,20; கும்பகோணம் வலையபேட்டை அக்ரஹாரம் கற்பகவல்லி நகர் லெனின் மகன் ஜெகதீஸ்வரன், 20; ஆகியோரை கடலோர போலீசார் மீனவர்கள் உதவியுடன் தேடி வந்தனர்.
இந்நிலையில் நிரவி, கர்க்காளச்சேரி மீனவ கிராமத்தில் ஜெகதீஷ் உடல் மீட்கப்பட்டு, அரசு மருந்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மாணவர் அபிலாைஷ போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
GIPHY App Key not set. Please check settings