மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இலாகாக்கள் குறித்த அதிகாரபூர்வ பட்டியல் வெளியாகியிருக்கிறது… யாருக்கு என்ன இலாகா?
பிரதமர் மோடி (Modi)- பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம், அணுசக்தி துறை, விண்வெளி துறை.
Cabinet Portfolio: மோடி 3.0 அமைச்சரவை
1) ராஜ்நாத் சிங் (பா.ஜ.க) – பாதுகாப்புத்துறை
2) அமித் ஷா (பா.ஜ.க) – உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை
3) நிதின் கட்கரி (பா.ஜ.க) – சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
4) ஜே.பி.நட்டா (பா.ஜ.க) – சுகாதாரம், குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை
5) சிவராஜ் சிங் சௌஹான் (பா.ஜ.க) – வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை
6) நிர்மலா சீதாராமன் (பா.ஜ.க) – நிதித்துறை கார்ப்பரேட் விவகார அமைச்சர்
7) எஸ்.ஜெய்சங்கர் (பா.ஜ.க) – வெளியுறவுத்துறை
8) மனோகர் லால் (பா.ஜ.க) – மின்சாரத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரம்
9) ஹெச்.டி.குமாரசாமி (ஜே.டி.எஸ்) – எஃகு மற்றும் கனரக தொழில்துறை
10) பியுஷ் கோயல் (பா.ஜ.க) – வர்த்தகம் மற்றும் தொழில்துறை
11) தர்மேந்திர பிரதான் (பா.ஜ.க) – கல்வித்துறை
12) ஜிதன் ராம் மாஞ்சி (HAM) – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
13) லல்லன் சிங் (ராஜீவ் ரஞ்சன்) JDU – பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
14) சரபானந்த சோனோவால் (பா.ஜ.க) – துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை
15) கிஞ்சரப்பு ராம் மோகன் (TDP) – விமான போக்குவரத்துத்துறை
16) வீரேந்திர குமார் (பா.ஜ.க) – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
17) ஜுவால் ஓரம் (பா.ஜ.க) – பழங்குடியினர் நலத்துறை
18) பிரகலாத் ஜோஷி (பா.ஜ.க) – நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
19) கிரிராஜ் சிங் (பா.ஜ.க) – ஜவுளித்துறை
20) அஷ்வினி வைஷ்ணவ் (பா.ஜ.க) – ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
21) ஜோதிராதித்ய சிந்தியா (பா.ஜ.க) – தகவல் தொடர்பு, வடகிழக்கு மேம்பாட்டுத்துறை
22) பூபேந்தர் யாதவ் (பா.ஜ.க) – சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்
23) அன்னபூர்ணா தேவி (பா.ஜ.க) – மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை
24) கஜேந்திர சிங் (பா.ஜ.க) – கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை
25) கிரண் ரிஜிஜு (பா.ஜ.க) – நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
26) ஹர்தீப் சிங் புரி (பா.ஜ.க) – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
27) மன்சுக் மாண்டவியா (பா.ஜ.க) – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை
28) ஜி கிஷன் ரெட்டி (பா.ஜ.க) – நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை
29) சிராக் பாஸ்வான் – லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – உணவு பதப்படுத்தும் தொழில் துறை
30) சி.ஆர்.பாட்டீல் (பா.ஜ.க) – நீர்வளத்துறை
1) இந்தர்ஜித் சிங் (பா.ஜ.க) – புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும்
திட்டமிடல் அமைச்சகம் இணையமைச்சர் (தனி பொறுப்பு), கலாசாரத்துறை இணையமைச்சர்.
2) ஜிதேந்திர சிங் (பா.ஜ.க) – அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை, அணுசக்தித் துறை, விண்வெளித்துறை இணையமைச்சர், விண்வெளித் துறை இணையமைச்சர்
3) அர்ஜுன் ராம் மேக்வால் (பா.ஜ.க) – சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
4) பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் (சிவசேனா) – ஆயுஷ் அமைச்சக இணையமைச்சர் (தனி பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர்
5) ஜெயந்த் சிங் சௌதரி (RLD) – திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக இணையமைச்சர் (தனி பொறுப்பு), கல்வித்துறை இணையமைச்சர்
6) ஜிதின் பிரசாத் (பா.ஜ.க) – வர்த்தகம், தொழில்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை
7) நித்யானந்த் ராய் (பா.ஜ.க) – உள்துறை
8) ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாய்க் (பா.ஜ.க) – மின்சாரத்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
9) பங்கஜ் சௌதரி (பா.ஜ.க) – நிதித்துறை
10) எஸ்.பி சிங் பாகேல் (பா.ஜ.க) – மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, பஞ்சாயத்து ராஜ்
11) கிருஷணன் பால் (பா.ஜ.க) – கூட்டுறவுத்துறை
12) ஷோபா கரந்த்லாஜே (பா.ஜ.க) – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
13) கீர்த்தி வர்தன் சிங் (பா.ஜ.க) – சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை, வெளியுறவுத்துறை
14) ராம்தாஸ் அத்வாலே (இந்தியக் குடியரசுக் கட்சி) – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
15) பி.எல்.வர்மா (பா.ஜ.க) – நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
16) ஷாந்தனு தாக்கூர் (பா.ஜ.க) – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை
17) அனுப்ரியா படேல் – அப்னா தளம் (சோனேலால்) – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை
18) சுரேஷ் கோபி (பா.ஜ.க) – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை
19) வி.சோமண்ணா (பா.ஜ.க) – ரயில்வே மற்றும் நீர்வளத்துறை
20) எல்.முருகன் (பா.ஜ.க) – தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
21) அஜய் தம்தா (பா.ஜ.க) – சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை
22) பெம்மாசனி சந்திரசேகர் (பா.ஜ.க) – ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொடர்புத்துறை
23) பாகீரத் சௌதரி (பா.ஜ.க) – வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை
24) சதீஷ் சந்திர தூபே (பா.ஜ.க) – நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை
25) சஞ்சய் சேத் (பா.ஜ.க) – பாதுகாப்புத்துறை
26) ரவ்னீத் சிங் பிட்டு (பா.ஜ.க) – உணவு பதப்படுத்துதல் துறை மற்றும் ரயில்வே
27) துர்கா தாஸ் உய்கே (பா.ஜ.க) – பழங்குடியினர் நலத்துறை
28) ரக்ஷா நிகில் கட்ஸே (பா.ஜ.க) – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
29) சுகந்தா மஜும்தார் (பா.ஜ.க) – கல்வி மற்றும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை
30) ராஜ்பூஷன் சௌதரி (பா.ஜ.க) – நீர்வளத்துறை
31) பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா (பா.ஜ.க) – கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை
32) ஹர்ஷ் மல்ஹோத்ரா (பா.ஜ.க) – கார்ப்பரேட் விவகாரத்துறை மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
33) டோகன் சாஹு (பா.ஜ.க) – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை
34) நிமுபென் பம்பானியா (பா.ஜ.க) – நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை
35) முரளிதர் மொஹோல் (பா.ஜ.க) – கூட்டுறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை
36) ஜார்ஜ் குரியன் (பா.ஜ.க) – சிறுபான்மையினர் நலன் மற்றும் மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
37) பபித்ர மகெரிட்டா (பா.ஜ.க) – வெளியுறவுத்துறை மற்றும் ஜவுளித்துறை
38) சாவித்திரி தாக்கூர் (பா.ஜ.க) – மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை
49) கமலேஷ் பாஸ்வான் (பா.ஜ.க) – ஊரக வளர்ச்சித்துறை
40) ராம்நாத் தாக்கூர் (ஐக்கிய ஜனதா தளம்) – வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை
41) பாண்டி சஞ்சய் குமார் – உள்துறை
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
GIPHY App Key not set. Please check settings