புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, இன்று (பிப்., 1ம் தேதி) இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யும் ஆறாவது மத்திய பட்ஜெட் இதுவாகும்.
கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜன.,30ம் தேதி டில்லியில் உள்ள பார்லி., நூலகக் கட்டடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. காங்கிரஸ், திமுக, அதிமுக, இடது சாரி கட்சிகள், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
GIPHY App Key not set. Please check settings