in

Cinema Roundup: சிரஞ்சீவியை சந்தித்த அஜித்; ரஜினியுடன் இணையும் பிரபலம் – இந்த வார சினிமா செய்திகள்! | Ajith – Chiranjeevi meeting, Rajinikanth’s Himalaya visit – Cinema Round Up


வணங்கான் ரிலீஸ்:

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் “வணங்கான்’ திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘வணங்கான்’ திரைப்படம் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.

ரஜினியின் இமயமலை டூர்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. தனது ஒவ்வொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினிகாந்த் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்தாண்டும் பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தார்.

இந்தாண்டு முதலாவதாக உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத் தளத்திற்குச் சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூல வலைதளப் பக்கத்தில் பரவிவந்தன. இதனைத் தொடர்ந்து இன்று நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு அருகிலிருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக டெஹ்ராடுன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஒவ்வொரு வருடமும் இந்தப் பயணம் எனக்குப் புதுவகையிலான அனுபவத்தைக் கொடுக்கிறது. அப்படியான விஷயங்கள்தான் என்னை இதுபோன்ற பயணத்தை மேற்கொள்ள உந்துதல் தருகின்றன. இந்த முறையும் இந்தப் பயணம் நல்லதொரு அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் | BJP alliance to form government again ls election exit poll

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா மோதல் | t20 world cup starts today america canada plays in first match