இன்டீரியரைப் பொருத்தவரை, பீஜ் நிற சீட்களில் வெளிப்புறத் தோற்றக் கலரான புளூ கலர் லைனில் Colour Co-ordinated சீட் கவர்கள் இருக்கின்றன. அதிலும் 7-ம் நம்பர் தையல் வேலைப்பாடு. சொகுசான பயணத்துக்கு குஷன் தலகாணிகள், அட சீட் பெல்ட்டுக்குக்கூட குஷன் கொடுத்திருக்கிறார்கள். காரில் கால் வைத்து ஏறும் ஃபுட்ரெஸ்ட்டுக்குப் பக்கத்தில் உள்ள Illumitated Sill Plate மற்றும் முன் பக்க டேஷ் கேமரா போன்றவை இதில் உண்டு. இதன் குளோவ்பாக்ஸில் தல தோனியின் கையெழுத்திடப்பட்ட குளோவ்ஸ் ஒன்று காரை வாங்கும் வாடிக்கையாளருக்குப் பரிசாக இருக்கும். காஸ்மெட்டிக் மற்றும் தோற்றத்தைப் பொருத்தவரை தோனி எடிஷன் அம்புட்டுதேன்!
மற்றபடி இதிலுள்ள இன்ஜின் போன்ற மெக்கானிக் விவரங்கள் எதுவும் மாறவில்லை. அதே 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 110bhp பவர், 205Nm டார்க் போன்றவைதான் இருக்கின்றன. 45 லிட்டர் டேங்க் கொண்ட இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டுமே உண்டு. 26செமீ டச் ஸ்க்ரீன் இன்ஃபோடயெின்மென்ட் சிஸ்டம், ஹில் ஹோல்டு, இஎஸ்பி, டயர் ப்ரஷர் மானிட்டரிங், இன்ஜின் ஸ்டார்ட் – ஸ்டாப் என 38 வகையான ஸ்மார்ட் வசதிகள் கொண்ட சிட்ரன் C3 ஏர்க்ராஸின் ஒரு மிகப் பெரிய பலம் 5 சீட்டராகவும், 7 சீட்டராகவும் கிடைப்பதுதான். இப்போது தோனியும் சேர்ந்து ப்ளஸ் ஆக்கிவிட்டார் C3 காரை.
GIPHY App Key not set. Please check settings