தென்னிந்திய மக்களைப் பொறுத்தவரை, பெரும்பாலானவர்களுக்கு அக்குள் பகுதி கறுப்பாகத்தான் இருக்கும். அக்குள் என்றில்லை, மார்பகங்கள், தொடை இடுக்கு, வெஜைனா பகுதி போன்றவற்றிலும் கருமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். இன்னும் சிலருக்கு மரபியல்ரீதியாகவும் அந்தக் கருமை தொடரும். சிலர் அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க அவசரம் அவசரமாக ஷேவ் செய்வார்கள். சிலர், ரிவர்ஸில் ஷேவ் செய்வார்கள். இதெல்லாம் அந்தப் பகுதிகளின் கருமைக்கு காரணமாகும். சருமத்தில் உராய்வு அதிகமானாலும் கருமை ஏற்படும். இதை “பிக்மென்ட்டேஷன்’ என்கிறோம். இறுக்கமான உடைகள் அணிவதாலும் இதுபோல பிக்மென்ட்டேஷன் வரலாம். செயின் அணிகிறவர்கள் சிலருக்கும் இந்தக் கரும்படலம் ஏற்படலாம்.
இன்சுலின் சரியாகச் சுரக்காதவர்களுக்கும், உடல் பருமன் உள்ளவர்களுக்கும் சருமம் இயற்கையாகவே சற்று தடிமனாக மாறும். அந்தக் கருமையானது வெல்வெட் போன்ற படலமாகக் காட்சியளிக்கும். அதை என்னதான் தேய்த்துக் குளித்தாலும் போகாது. உடல் பருமன் உள்ளவர்கள், எடையைக் குறைத்தால் மட்டுமே அது ஓரளவு மறையும். இப்படி எந்தக் காரணத்தால் அக்குள் பகுதியில் கருமை ஏற்பட்டது என்பது தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை கொடுக்க வேண்டும். அதைத் தவிர்த்து கண்ட கண்ட க்ரீம் தடவுவதெல்லாம் பலன் தராது.
அந்தரங்க உறுப்பு ரோமங்களை லேசர் முறையில் அகற்றுவது மிகப் பாதுகாப்பானது. இதில் கருமையும் மறையும். அடுத்து ரேஸர் உபயோகிக்கலாம். அதை ரிவர்ஸில் வைத்து ஷேவ் செய்யாமல், சிங்கிள் சைடாக உபயோகிக்க வேண்டும். ஹேர் ரிமூவிங் க்ரீம் உபயோகிக்க வேண்டாம். அக்குள் பகுதியில் வியர்வை தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றோட்டமான உடைகளை அணிவது, அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்றவையும் அவசியம். ஆன்டிபாக்டீரியல் வாஷ் பயன்படுத்தலாம், பவுடர் உபயோகிக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
GIPHY App Key not set. Please check settings