Doctor Vikatan: என் வயது 49. கடந்த வருடம் பித்தபையில் கல் வந்ததால் லேப்ராஸ்கோபி மூலம் பித்தபையை அகற்றி விட்டனர். எனக்கு BP மற்றும் சுகர் பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். எனக்கு உணவு உண்டதும் மலம் கழிக்கும் பிரச்னை உள்ளது. ஒரு நாளைக்கு 6 அல்லது 7 முறை மலம் வருகிறது. தவிர, ஆசனவாய் அருகே அரிப்பும், சிறு சிறு வேர்க்குரு போன்றும் உள்ளது. இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
-பரமேஸ்வரன், சேலம், விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
பித்தப்பையை அகற்றியபிறகு உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக, கொழுப்புச்சத்து, காரம், மசாலா, எண்ணெய் உள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வந்திருப்பது “இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ (Irritable bowel syndrome ) என்ற பிரச்னையின் அறிகுறி போலத் தெரிகிறது.
GIPHY App Key not set. Please check settings