கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் அதிகப்படியான போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, அவற்றை புழக்கத்தில்விட்ட, கள்ளநோட்டு அச்சிடும் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கர்நாடக காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இந்த நிலையில், இந்த கள்ளநோட்டு கும்பல் “ஃபர்ஸி’ (FARZI) என்ற இந்தி வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்டு, இச்செயலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளான அன்வர் யாதவாத், சதாம் யாதல்லி, ரவி ஹயகாடி, துண்டப்பா ஒனஷேனவி, விட்டல் ஹோசதொட்டல், மல்லப்பா குண்டலி ஆகியோர் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்து புழக்கத்தில் விட்டது, தெரியவந்துள்ளது. இச்சூழலில் கோகாக் நகரில் உள்ள கடபகட்டி குடா என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது காருக்குள் 305 போலி 100 ரூபாய் நோட்டுகளும், 6,792,500 ரூபாய் நோட்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, காரை பறிமுதல் செய்த போலீஸார், அந்த கும்பலையும் கைதுசெய்தனர்.
இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பெலகாவி மாவட்டம், முதலகி தாலுகா அரபாவியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இரவு நேரத்தில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததை ஒப்புக்கொண்டதாகவும்,
GIPHY App Key not set. Please check settings