120க்கும் மேற்பட்ட படங்கள்ல குணச்சித்திரம், நகைச்சுவை, ஹீரோனு எல்லாமே பண்றீங்க. கரியர் நிறைவா இருக்கா ?


“நான் காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கும்போதுதான், சினிமாதான் எனக்கு ரொம்ப பிடிக்குது, அதுக்குள்ள போகணும்னு தோணுச்சு. மம்மூட்டி சார், மோகன்லால் சார், நெடுமுடி வேணு சார், ஜெகதி ஶ்ரீகுமார் சார், லலிதா அம்மா தமிழ்ல ரஜினி சார், கமல் சார், கவுண்டமணி சார், வடிவேலு சார், இளையராஜா சார், ரஹ்மான் சார் இவங்க எல்லோரும்தான் இன்ஸ்பிரேஷன். சினிமாவுக்குப் போறேன்னு வீட்ல சொல்லிட்டேன். சினிமாவுல ஏதாவது பண்ணணும்னு சுத்திட்டு இருந்த சமயத்துல வினித்தும் நானும் நிறைய பேசுவோம். எனக்கும் கதை எழுதணும், இயக்குநராகணும்னு ஆசை. நடிக்க வாய்ப்பு அமைஞ்ச பிறகு, அதுல கவனம் செலுத்திட்டு இருந்தேன்.
‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ல ஆரம்பிச்ச பயணம் தொடர்ந்துக்கிட்டு இருக்கு. இடையில அவருடைய ‘ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம்’ படத்துல உதவி இயக்குநரா வினித்கிட்ட வேலை செஞ்சேன். ரொம்ப சிரமமா இருந்தது. அதுக்கு பிறகு, இயக்குநராகணுங்கிற ஆசையே போயிடுச்சு. இதுவே நடிக்கும்போது எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் பண்ண தோணுது. அப்போ, நமக்கு கிடைச்சிருக்கிற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்னு நினைச்சு பண்ணிட்டு இருக்கேன் சந்தோஷமா நிறைவா பண்றேன். நிறைய கத்துக்கிறேன்”



GIPHY App Key not set. Please check settings