‘கதறல்ஸ்’ வாய்ப்பு எப்படி வந்தது..?
“நான் சினிமாவில் ரஜினி சாரோடும் கமல் சாரோடும் வேலை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ‘பேட்ட’ படத்தில் ரஜினி சாரோடு வேலை பார்த்துட்டேன். கமல் சாருகூட வேலை பார்க்கிறது மட்டும் நடக்காமலே இருந்தது. ஷங்கர் சார் ஆபிஸிலிருந்து போன் பண்ணி, ”இந்தியன் – 2′ படத்தில் ஒரு சாங் பண்ணணும்’னு சொன்னப்போ அந்த ஆசையும் நிறைவேறிடுச்சுன்னு சந்தோஷமாக ஷங்கர் சாரை பார்க்கப் போனேன். அங்கதான் ஷங்கர் சார் ஒரு ட்விஸ்ட் வெச்சார். ‘இந்த பாட்டில் கமல் சார் இருக்க மாட்டார். ஆனால், இந்தியன் தாத்தாவோட வருகையை சொல்ற மாதிரி இந்தப் பாட்டு இருக்கும்’னு சொன்னார். சரி… கமல் சார் படத்துல இவ்வளவு பெரிய பாட்டு கிடைக்குதே. இதை சூப்பரா பண்ணிடுவோம்னு இறங்கி வேலைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.
ஷங்கர் சார் இந்தப் பாட்டை ரொம்ப பிரமாண்டமாக ப்ளான் பண்ணியிருந்தார். இதுவரைக்கும் நான் 500 டான்சர்களை வச்சு பாட்டு பண்ணதேயில்லை. அந்தளவு என் கரியரோட ஒரு பெரிய பாட்டாக ‘கதறல்ஸ்’ பாட்டு அமைச்சிருக்கு. ஷங்கர் சாரும் பாட்டைப் பார்த்து, ‘ரொம்ப சூப்பராகப் பண்ணிட்டீங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’னு பாராட்டினார். இந்தப் பாட்டு சூப்பராக வந்ததற்கு மிக முக்கியமான காரணம் அனிருத்தான். அவர் போட்டுக்கொடுத்த செம ட்யூனாலதான் என்னால ரொம்ப நல்லா கோரியோ பண்ண முடிஞ்சது. இந்தப் பாட்டுக்காக நான் கேட்ட எல்லா விஷயத்தையும் ஷங்கர் சாரும் தயாரிப்பாளரும் பண்ணிக்கொடுத்தாங்க. அதுதான் இந்தப் பிரமாண்டத்திற்குக் காரணம்.”
GIPHY App Key not set. Please check settings