நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதிலும், கமல் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தீபிகா படுகோன், திஷா பதானி கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். இப்படம் மகாபாரத காலத்தில் ஆரம்பித்து கி.பி. 2898-ம் ஆண்டில் முடிவடைகிறது. கிட்டத்தட்ட 6000 ஆண்டுகள் நடக்கும் கதை இது என்று கூறப்படுகிறது.
விஷ்ணுவின் அவதாரமான கல்கியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இத்திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் கமல், அமிதாப் பச்சன், பிரபாஸ், இயக்குநர் நாக் அஸ்வின், தீபிகா படுகோன், ராணா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருகின்றனர். இந்த நிகழ்ச்சியை பாகுபலி படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்கினார்.
GIPHY App Key not set. Please check settings